குழந்தை தொழிலாளர்கள்

குழந்தை தொழிலாளர்கள்


காக்கை கூட்டில் குயில் முட்டைகள்!
வாழ்க்கையுடன் சமர்செய்யும் வானம்பாடிகள்!
வெள்ளை உள்ளம் கொண்ட பிஞ்சுப் புறாக்கள்!
வேதனையொன்றிலே விஜயம் செய்யும் சிங்கங்கள்!
வியர்வை சுரங்கங்கள்!
கண்ணீர் புதையல்கள்!
அறிவிற்கு ஆயுள்தண்டனை பெற்ற அறிஞர்கள்.
கரும்பலகையை கண்ணில் பாரத கவிஞர்கள்.

தாய் தந்தையாரின் விதியைச் சொல்வதா? இல்லை
மானுட இனம் செய்த சதியை சொல்வதா?
வெட்கம்கெட்ட உலகமிது
வேடிக்கைமனிதர்களே உங்களால் ஏற்பட்ட பட்டம்
சுய அறிவினை சூரயாடியதா காலம்!
தன்னம்பிக்கையை தகர்த்துவிட்டதா உலகம்!
மூளை இருந்தும் மூடர்களாக வாழவேண்டுமா?
இதயமிருந்தும் இழிந்தவனாய் சாகவேண்டுமா?
சீரம்கொண்ட சிந்தனைக்கான நேரமிது!
அன்பினை கேட்டுவாங்கும் காலமிது!
மாற்றுங்கள்! இல்லை மாறுங்கள்!
மாறாக மாற்றப்பட்டுவிடுவீர்கள்!

சாவென்பது ஒருமுறைதான் சங்கல்பமெடுங்கள்!
சகலலோகமும் அன்பென்பதை உணருங்கள்!
எத்தி உதிக்கும் பந்து போல எத்தப்படும் மழலைகள்
ஏங்கி ஏங்கியே இறந்துகொண்டிருக்கும் குழந்தைகள்
ஆறறிவுகொண்ட நரகவாசிகளே உணருங்கள்!
இல்லை உணர்த்துங்கள் மாறாக உணர்தப்பட்டுவிடுவீர்கள்!

மற்றவருக்காக உற்றவரை துறந்த மைனாக்கூட்டம் இன்று
மாட்டித்தவிக்கிறது வேடுவன் கைகளில்!
வெட்டிப்பேச்சுக்களை கெட்டியாகப்பேசும் வீணர்களே!
கற்றுக்கொள்ளுங்கள்! இல்லை கற்பியுங்கள்!
மாறாக கர்பிக்கப்பட்டுவிடுவீர்கள்!

ஏதுமறியா வயதினிலே ஏற்பட்டசோகம்!
யாதுமறியா வயதினில் வாட்டிய வறுமை!
குழந்தையின் சாபமென்பது இறைவனின் கோபத்திற்கு சமம்
முதலாளி என்றசொல்லை மூச்சாக சுவாசிக்கும் மூடர்களே!
கைவிடுங்கள்! இல்லை கைவிடச்சொல்லுங்கள்!
மாறாக கைவிடப்படுவீர்கள்! இறைவனால்.

தேனீக்கூட்டம்போல தெருவெல்லாம் விளையாடும் குழந்தைகள்
இன்று
மாறுவேடம் கொண்டு மாயந்துகொண்டிருகின்றனர்
நிலவினைரசித்து பால்பருகவேண்டிய மழலைகள் இன்று
நிலம்தனில் வாழ நிலையற்று நிற்கின்றனர்
போதுமடா போதும்!
போதையில் ஆடும் வெறியாட்டம் போதும் !
பணத்திற்கு வாழும் பகட்டுவாழ்கையும் போதும் !
மரணத்தினை எதிர்நோக்கும் மனிதர்களே !
சாகுங்கள் இல்லை சாகசொல்லுங்கள் !
மாறாக சாகடிக்கப்பட்டுவிடுவீர்கள் !

எழுதியவர் : ப.சுகுமாறன் (8-Jan-15, 10:47 pm)
சேர்த்தது : சுகுமாறன் கவிஞன்
பார்வை : 1548

மேலே