என் விழிகளில் விழுந்தாயடி பல விந்தைகள் செய்தாயடி

மூங்கிலினால் இசைக்கும்
ராகம் ; முழுவதுமே நம் காதல் கீதம் .
காற்றில் பற்றி எரியுதடி - கள்ளி
உனக்கு அது புரியலையா ??? (என் விழிகளில் ...)
உன் கனவிலே கண்ணுறங்க
கலையாத உன் நெனப்பு - அதில்
கரையுதடி காலை நேரம் .
என் எண்ணம் நெசமாகி போகுமாடி -?? ( என் விழிகளில் ..)
அங்கம் தொடாது
அங்கங்கே தெரியும் உன்
நெளிவழக பார்ப்பதற்கு
ஆச மிகத் தூண்டுதடி-தங்கம் . ( என் விழிகளில் ...)
பங்கம் வந்து விடுமோ
என்று பார்த்து பார்த்து
காதல் செய்தேன் . இதில் பங்கு போட
எவருக்கும் உரிமையில்லை . ( என் விழிகளில் ..)
என் இமைக்குள் இருக்கும்
இத்தனையும் இதமாக பேசுதடி .
இசைக்குள் இருக்கும்
சுகத்தையும் இசைக்குறேனடி மெதுவாக . (என் விழிகளில் ..)