காதல் சிந்தனை

இருவிழி பார்வைக்குள்,
இதயங்கள் இடமாற -
இருமன மொருசேர,
இடைவிடா ஞாபகத்தில்
இன்று வருவாளா..?
இன்று வருவானா..?
நாளை வருவாளா..?
நாளை வருவானா..?
நாட்களைக் கடிந்து,
நரகமாய் நகர்த்தும் -
விதிகளை மீறும்,
விரக்தியி னுச்சம்..!
விவேக மென்றாலது
வாகை சூடும் ;
விளையாட் டென்றாலது
வினையாய் முடியும்..!