48 கொக்கோ கோலா

கொக்கோ கோலா நிறுவனத் தலைவன்
*** கொடுத்தான் ஒருபேட்டி:
'சிக்கிக் கொண்டது இந்தியா! இனிமேல்
*** செழிக்கும் வியாபாரம்!

'கனவுக் கண்ணன் கனவுக் கன்னியைக்
*** காசால் அடியுங்கள்!
தினமும் அவர்கள் நடிக்கும் விளம்பரம்
*** திரையில் காட்டுங்கள்!

'எண்ணி இரண்டே ஆண்டில் இந்திய
*** இளைஞர் பட்டாளம்
தண்ணீர்க் குப்பதில் கோலா குடிக்கும்
*** சரித்திரம் காணுங்கள்!'

அந்நியன் எப்படி அழகாய் நம்மை
*** அளக்கிறான் பாருங்கள்!
சொன்னதன் படியே நடந்ததா இலையா
*** சூழ்ச்சியும் காணுங்கள்!

பதநீர் இளநீர் மோர்நீர் புளிநீர்
*** பருகிய வழிவந்தோர்
புதுநீர்க் கோலா குடித்துக் களிக்கிறார்
*** புதுமை எனும்பேரில்!

படித்ததைக் கேட்டால் எம்.ஈ., பி.ஈ.,
*** என்று சொல்வார்கள்!
குடிப்பதைப் பார்த்தால் உணவுடன் கோலா!
*** கொடுமை என்சொல்ல!

பல்லைக் கோலா பாட்டிலில் போட்டால்
*** பத்தே நாளைக்குள்
பல்லிருக் காது கரைந்தே போகும்
*** பாழும் திரவமடா!

கக்கூஸ் கோப்பையில் கோலா ஊற்றினால்
*** கறையை எடுத்துவிடும்!
இக்கோ லாவை உள்ளே ஊற்றினால்
*** இரைப்பையைக் கெடுத்துவிடும்!

இதைத்தான் இங்கே இளமையின் சின்னமாய்
*** ஏந்திப் பிடிக்கின்றார்! .
அதைத்தா னேஅவன் இங்கெதிர் பார்த்தான்?
***

எழுதியவர் : ராஜமாணிக்கம் (11-Jan-15, 12:43 pm)
சேர்த்தது : டோனி கிறிஸ்டோபர் (தேர்வு செய்தவர்கள்)
பார்வை : 121

சிறந்த கவிதைகள்

மேலே