இதய விளக்கு

நான் ஒன்றும் இரும்பல்ல,
இதயம் கொண்ட உயிர்!!
அழகாய் விளையாட நானொன்றும் பொம்மையல்ல,
சிறு வார்த்தைக்கு வதங்கும் பூ!!
ஒரு நொடியில் கடந்து செல்ல நானொன்றும் அலையல்ல ,
உன் மனதில் எரியும் தீ!!
என்றும் வாழ்வேன் இதயத்தில் விளக்காய்!!!

எழுதியவர் : இன்தமிழ் (14-Jan-15, 7:56 pm)
சேர்த்தது : இன்தமிழ்
Tanglish : ithaya vilakku
பார்வை : 67

மேலே