இயற்கை உரத்தை இதயத்திலே வைப்போம்
உலகப்போர்லே
உபரியான இரசாயனமென்னு....!
உதறித்தள்ளியதெல்லாம்
உன் நாட்டிலே
உயிர் சத்துன்னு சொல்ற
உயிர் கொல்லி உரமாச்சு....!
பத்து மாசம் சுமந்து
பெத்தாதான்
பதுசாய் இருக்கும் புள்ளே....!
ஆறுமாசத்திலே பெத்தா
அது அரை குறையாதான் இருக்கும்....!
ஐந்து மாசத்திலே
விளைஞ்ச நெல்லை....!
நாற்று நட்ட
நாற்பது நாளிலே
முத்தான நெல்லுவேணும்னு....!
செயற்கை உரத்தை
சகட்டுமேனிக்கு
அள்ளி விட்டான்.....!
முண்டாசுகட்டின முனுசாமி....!
மண்ணெல்லாம் மலடாச்சு....!
மண்புழுவெல்லாம் செத்தாச்சு.....!
விளைஞ்சதெல்லாம் விஷமாச்சு.....!
வீரியமும் குறைஞ்சாச்சு.....!
மூட்டை மூட்டையா
நஞ்சு உரத்தை
கொட்டாதிங்கடான்னு....!
தலைபாடா அடிச்சுகிட்டாரு
தாடிவைச்ச நம்மாழ்வார்.....!
நாட்டு பசுமாட்டு மூத்திரத்திலே
நாலஞ்சு இளநீரை ஊற்றி....!
புளித்த தயிரும்
புது நெய்யும் சேர்த்து....!
கரும்புசாரும்
கைநிறைய வாழைபழமும் போட்டு.....!
கலக்கு கலக்குனா
பஞ்சகாவ்யா தயார்....!
ஆடுதின்னா இலை
ஐந்தாறு ஒரு கிலோ எடுத்து....!
பிச்சு பிச்சு பானையிலே போட்டு....!
பசுமாட்டு சிறுநீர் ஊற்றி....!
துணியிலே வேடுகட்டி....!
துறவுலே குழிவெட்டி....!
தூசு படாம புதைச்சு.....!
துண்டால வடிகட்டினா....!
பூச்சி விரட்டி தயார்....!
பதினெஞ்சு நாளைக்கு ஒருமுறை
பகலவன் வரும் முன்னே.....!
பஞ்சகாவ்யா பாய்ச்சினா - நாம
பழஞ்சோறு சாப்பிட்ட மாதிரி
பசுமையா விளைஞ்சிடும் பயிருங்கோ.....!
இலையால தயாரிச்ச
இயற்கை பூச்சி கொல்லி....!
இருவது நாளைக்கு ஒருமுறை
இயந்திரத்தாலே அடிச்சா....!
இல்லாம போயிடும் பூச்சிங்கோ....!
இது தெரியாம இஷ்டத்துக்கும்
இரசாயன உரத்தை இறைத்து....!
இங்கும் அங்கும் கடன் வாங்கி
இல்லாம போனதுதான் மிச்சம்....!
செயற்கை உரத்துக்கு
சவப்பெட்டி செஞ்சி....!
இயற்கை உரத்தை
இளக்காரம் செய்யாமல்....!
இதயத்திலே வைப்போம்.