எதை வடிப்பேன் எழுத்தில் நான்

எதை வடிப்பேன் எழுத்தில் நான்

எதை வடிப்பேன் எழுத்தில் ..!!

இன அழிப்பின் கொடூரம்
இன்றளவும் நடக்குது என்றா?

எண்ணிலடங்கா உயிர்கள்
இரையாகி போவதையா .?

வளரும் முன்னே தமிழன் கருவை
வயிற்றிலே அழிப்பதையா.?

வாசம் அற்ற மலர்கள் மட்டும்
ஈழ மண்ணில் வாழ்வதையா.?

எதை வடிப்பேன் எழுத்தில் நான்.?


காணாமல் போனதாக கடத்தப்படும்
கொடுமையையா .?

கண்டும் காணாதது போல கண்மூடி
உறங்கும் நீதியையா .?

ஆட்சி மாறியவுடன் அனைத்தும்
மாறும் என நம்பும் மூடறையா.?

தண்டிப்பதாய் கூறி நழுவிச் செல்லும்
ஐ .நாவையா .?

எதை எழுதுவேன் எழுத்தில் நான்.?????????

எழுதியவர் : கயல்விழி (20-Jan-15, 6:55 pm)
பார்வை : 279

மேலே