கிராமம் அழகிய கிராமம்
அதிகாலை கதிரவனை வரவேற்க தோன்றிய
வாசல் கோலங்கள்...
வண்ணத் தமிழ் முழங்கும்
கோவில் கீர்த்தனங்கள்...
மொழிக்கு இளமை சேர்க்கும்
மழலையின் அமுத மொழிகள்...
அரங்கமே இல்லாமல் மேகங்களை பார்வையாளர்களாய்
ஈர்க்கும் மயிலின் அழகிய நடனம்...
வார்த்தைகளின்றி இன்னிசை படைக்கும்
குயிலின் பாடல்...
காற்றை சலித்து மனிதனின் நண்பனாய் திகழும்
நீண்டு வளர்ந்த நெடுமரங்கள்...
அழகென்னும் வார்த்தைக்கு அர்த்தமென தன்னை
அறிமுகம் செய்து கொள்ளும் மலர்கள்...
அவை தன்னையும் அலங்கரித்து உலகையும் அலங்கரிக்கும்
அற்புத காட்சிகள்...
இவை அனைத்தும் கொண்டு மனம் மயக்கிய வண்ணம்
மகிழ்வித்தது இந்த இனிய கிராமம்...