கடவுள் வருவாரா கருணை தருவாரா
மனிதத்தைத் தொலைத்துவிட்ட
மகத்தான பூமியிலே
தனி மனித நேயத்தை
தரணியெங்கும் விதைப்பதற்கு
கடவுள் வருவாரா ? நமக்குக்
கருணை தருவாரா ??
வன்முறைகள் சூழ்ந்த இந்த
வக்கிர பூமியிலே
துன்ப நிலை மாற்றி
அன்பு நிலை உருவாக்கிட
கடவுள் வருவாரா ? நமக்குக்
கருணை தருவாரா ??
ஆயுதமே வேதமென்றும்
அடக்கு முறையே கொள்கையென்றும்
அன்பை வெறுப்பவர்க்கு
நற்பண்பை போதிக்க
கடவுள் வருவாரா ? நமக்குக்
கருணை தருவாரா ??
ஆணவத்தின் பிடியினிலே
அல்லலுறும் இப்பூமியை
காண்பதற்கும் புது உலகக்
கதவு திறப்பதற்கும்
கடவுள் வருவாரா ? நமக்குக்
கருணை தருவாரா ??
துளிக்கூட அமைதியின்றி
துன்புறும் மக்களின்
துயரைத் துடைப்பதற்கும்
துணிவைத் தருவதற்கும்
கடவுள் வருவாரா ? நமக்குக்
கருணை தருவாரா ??
உலகத்து மக்கள் எல்லாம்
உருக்குலைந்து சிதைந்து போய்
நரகத்தில் வாழும் நிலைமாற்றி
நல்லுலகம் படைத்திடவே
கடவுள் வருவாரா ? நமக்குக்
கருணை தருவாரா ??