உயிர்த்துளி

நம்பி இருக்கும் நண்பன்
உடையாமல் இருக்க
மண் மேல் துளித்துளியாய்
உடைகிறாய் நீ!!!

பிறரின் குறை தீர்க்க
பிறந்ததால் தான் உனக்கு
ஆயுட்காலம் என்பது இல்லையோ!!!

கண்ணீர் அரும்பி வானம்
பார்க்கும் போது
மெல்ல முகம் தழுவி
முத்தமிடும் நண்பன் நீ!!!!

அவ்வப்போது வாட்டி வதைத்தாலும்
குளிர்ச்சிவூட்டுவாய் நீ!!!!

வாழ்வின் இன்றியமையாத தேவை நீ!!!!

நம் உடலுக்கு உயிர்த்துளி குருதி
நம் மண்ணின் உயிர்த்துளி மழைநீர்!!!

எழுதியவர் : mohanadivya (1-Feb-15, 2:46 pm)
Tanglish : uyirthuli
பார்வை : 310

மேலே