அன்புள்ள அப்பா

உன்னாலே உயிரானேன்
உலகறியப் பயிரானேன்
ஊமையாய் உனதன்பை
உணராமல் போனேனோ?

களையாய் என் பிழைதீர
முளையாய் நீ வழியானாய்
கிளையாய் நான் புகழ்சூட
மழையாய் நீ கருவானாய்

எந்தையாய் உன்னை
எண்ணிய போதெல்லாம்
ஏமாந்து பேனேனோ?
எந்தையும் தாயுமாய்
என்றுமே நீயாகும்
விந்தையும் காணாமல்!

அடர்ந்த உனதன்பின்
ஆழம் அறியாமல்
உன் - என் இடைத் தூரத்தை
முடிவிலியில் தொலைத்தேனே!

எழுதியவர் : மதன் (2-Feb-15, 7:20 am)
சேர்த்தது : சதாசிவம் மதன்
பார்வை : 113

மேலே