சதாசிவம் மதன் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  சதாசிவம் மதன்
இடம்:  மட்டக்களப்பு, இலங்கை
பிறந்த தேதி :  20-Apr-1986
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  18-Jan-2015
பார்த்தவர்கள்:  247
புள்ளி:  32

என்னைப் பற்றி...

http://www.mathan.kavignan.com/

ஹாய் ! வணக்கம் ….. உங்கள் வருகைக்கு நன்றி

நான் மதன் , இலங்கையின் எழில் கொஞ்சும் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பிலிருந்து தெற்காக சுமார் 15 கிலாமீட்டர் தொலைவில் காணப்படும் புதுக்குடியிருப்பு எனும் சிறிய கிராமத்தில் வசிக்கிறேன் . என்னைப்பற்றிக் கூற பெரிய விடயங்கள் என ஒன்றும் கிடையாது . தொழில் ரீதியாக நான் ஒரு தாதிய உத்தியோகத்தராக அரசாங்க வைத்தியசாலைஒன்றில் கடமையாற்றுகின்றேன் .

கவிதை மற்றும் புகைப்படத்துறையில் எனக்கு கொஞ்சம் ஆர்வம் அதிகம் அவ்வளவுதான் . அதிலும் கவிதை துறைக்குள் நான் நுழைந்தது ஒரு விபத்தென்றுதான் கூறவேண்டும் . அது நான் சற்றும் எதிர்பாராத ஒரு நிகழ்வு . இருப்பினும் சந்தர்ப்பவசத்தால் அதனுள் உள்வாங்கப்பட்டேன் என்பதால் இதைப்பற்றி அறியாமலும் என்னால் இருக்க முடியவில்லை .

அது ஒரு சுவாரஸ்யமான கதை எனக்குத் தெரிந்த எனது முதல் கவிதை மட்டக்களப்பிலிருந்து வெளிவந்து கொண்டிருந்த ' செங்கதிர் ' எனும் சஞ்சிகையில் வெளியானது . அதன் பின் நடந்த ஒரு நிகழ்வே கவிதை உலகத்தினுள் என்னை அழைத்துவந்தது . இருந்தாலும் பாடசாலைக் காலத்தில் தரம் 8 படிக்கும் போது நான் ஒரு கவிதைப் போட்டியில் வெற்றியீட்டியதாக சான்றிதழ்கள் கூறுகின்றன . அதில் என்ன எழுதியிருப்பேன் என்ற வினா என்னுள் அடிக்கடி வந்து போகும் . அதற்காக நான் 8 ஆம் தரத்திலிருந்தே கவிதை எழுதுவதாக கூறவருகிறேன் என தப்பாக நினைக்கவேண்டாம் . எப்படியாவது போட்டிக்கு ஒருவரை அனுப்பியாக வேண்டும் என்பதற்காக என்னை அனுப்பியீருப்பார்கள் ஏனென்றால் கவிதை பற்றியதான எதுவித புரிதல்களும் எனக்கு அப்போது இருக்கவில்லை . கவிதை தொடர்பான நுகரலும் எனக்குள் இருக்கவில்லை . என்றாலும் கவிப்பேரரசு வைரமுத்து பாடல்கள் மீது எனக்குள் ஒரு ஈர்ப்பு இருந்தது . இப்போதும் அது குறையாமல் அப்படியே இருக்கிறது . ஒருவாறாக கவிதை உலகில் நானும் தவழத் தொடங்கினேன் . எனக்குள் ஒரு பழக்கம் எதைச் செய்தாலும் அதில் எனது அதிக உழைப்பை காட்டுவது . அதன் பயனாக 2010 இல் எனது தாதியக் கல்லூரிக் காலத்தில் முற்றுமுழுதாக கவிதைகளை மட்டுமே உள்ளடக்கமாக கொண்ட மாதாந்தச் சஞ்சிகையான ' கவிஞன் ' உருவானது . ( www.kavignan.com ) அதன் ஆசிரியர் நான் என்பதால் கவிதை பற்றிய அறிதல் எனக்கு அவசியமானது . கவிதைப்புலத்தை அறிய அதுவே வழிகோலியது . அதன் வாயிலாகக் கிடைத்த எழுத்தாளர்களுடைய தொடர்பு . சந்தித்த தருணங்கள் எல்லாமே எனது கவிதைப் புலச் சிந்தனைகளைத் தூண்டிய தருணங்கள் எனலாம் . அக்காலத்தில் தான் எனது முதல் கவிதை நூலான ' உயிரோவியம்' வெளியிட்டிருந்தேன்.

என்ன அலுப்பாயிருக்கிறதா சரி அது அப்படியே இருக்கட்டும் . புகைப்படத் துறை தற்போது ஒளிப்படம் என்பதே சரி என்கிறார்கள் அப்படியே கதைப்போம் . ஒளிப்படம் மீது எனக்கு சிறய வயதிலிருந்தே ஆசை . ஆனாலும் கமராவுக்கும் எனக்கும் ஏதோ ஏழுஜென்மப் பகை போலும் இரண்டு மூன்று கமராக்களைப் பழுதாக்கியூம் இறுதியாக அன்பளிப்பாய்க் கிடைத்த பெறுமதியான கமராவைக் களவு கொடுத்தும் இருக்கிறேன் . என்றாலும் கமரா புகைப்படம் மன்னிக்கவும் ஒளிப்படம் மீதான எனது ஆர்வம் குறைந்தபாடில்லை . அதற்கு அண்மையில்தான் எனக்கு அங்கீகாரம் கிடைத்தது . கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் நடத்திய புகைப்படப்போட்டியலில் மாகாணமட்டத்தில் எனக்கு முதலிடம் கிடைத்தது . மகிழ்வாய்த்தான் இருந்தது என்றாலும் வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கை ஏலவே பலமாக இருந்தது . இன்னமும் கவிதையிலும் சரி ஒளிப்படத்திலும் சரி கற்றுத்தான் ஆக வேண்டும் என்ற ஆர்வம் ஒவ்வொரு கவிதை எழுதும் போதும் ஒரு ஒளிப்படத்துக்காய் பல தடவைகள் சட்டரை அழுத்தும் போதும் அதிகரிக்கின்றதே தவிர குறையவில்லை .

வளமையாக எல்லோரும் சொல்வது தான் கற்றது கைம்மண்ளவு கல்லாதது உலகளவு .........

என் படைப்புகள்
சதாசிவம் மதன் செய்திகள்
சதாசிவம் மதன் - படைப்பு (public) அளித்துள்ளார்
13-Nov-2015 2:44 pm

எட்டாத வானை
தொட்டுப்பார்க்க
துரத்திச் செல்லும் - எமக்கு
வடிவமற்ற உருவைக் கூட
வரைந்துகாட்டும்
'வா' என்றால்
'போ' என்று பொருளென்று
பொருத்தமாய் சொல்லும்
வந்த பிணி போவதற்கு
வழியும் சொல்லும்.
மெஞ்ஞானம் என்று
மெய்யுரைத்தால்
சீச்சீ..... பொய்வாதம்
போய் வா என்று சொல்லும்

மெய்தான் என்று
மெய்யாய்த் தெரிந்த பின்னும்
பொருத்திப் பார்த்து
போருக்கழைத்து - பின்
திருட்டுத்தனமாய்
தின்றுபார்க்கும்- அந்த
விஞ்ஞானம்.

மேலும்

நன்று.. வெற்றி பெற வாழ்த்துக்கள்.. வாழ்த்துக்கள் தொடருங்கள்... 14-Nov-2015 12:17 am
முனோபர் உசேன் அளித்த படைப்பை (public) முனோபர் உசேன் மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
18-Feb-2015 6:09 pm

"பாரம் எல்லாம் வலியில்,
காயம் எல்லாம் மனதில்,
எப்படியும் உழைத்து-தான் ஆகவேண்டும்...

"காலையோ, மாலையோ,
இரவோ, பகலோ, வரும் சிற்றுந்து,
இவைகளை நான் எதிர்ப் பார்த்தால்தான் என் பிள்ளைகளுக்கு நண்பகல்-விருந்து"..

"உடம்பில் எத்தனை மூட்டைகளையும் அடுக்குங்கள்
என் பிள்ளையின் பசியை மட்டும் அடைத்தால்-போதும் "

"என் இரு கைகளும் சிவந்துப்-போகும்,
ஆனாலும்
என் மனமோ அதை மறந்துப்-போகும்
என் பிள்ளையின் பசியை உணர்ந்து".

"என் முதுகெலும்பு என்னிடம் சொல்லும்
நான் உடைந்-தாலும்
நீ உருக்குலைந்து விடாதே
பின்பு உன் பிள்ளையின் பச

மேலும்

அருமை !சில இடங்களில் ஒற்றுப் பிழைகள் உள்ளன சரி செய்யவும் ! உணர்ச்சிகள் மிக ஆழமாக உள்ளன ! 13-Oct-2020 1:20 pm
அருமை ... 07-Nov-2017 9:09 am
நன்று .பாராட்டுகள் 06-Jul-2016 4:44 pm
நல்ல வரிகள் அதில் சில வலிகள் உண்மையை உவமையை பாடியதற்கு நன்றி ....... உங்கள் முயற்சி தொடரட்டும் வாழ்க வளர்க .... 20-Aug-2015 12:50 am
சதாசிவம் மதன் - உதயகுமார் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
02-Feb-2015 5:28 pm

காட்டையும் நட்டு ஆளலாம்
...............காற்றையும் வெட்டி உண்ணலாம்
மலைகளையும் மண்ணாக்கலாம்
...............மண்களையும் கல்லாக்கலாம்


விண்ணையும் கிழித்துவிடலாம்
...............வானவில்லையும் முறித்துவிடலாம்
கார்முகிலைக் கூரையாக்கலாம்
...............மழைநீரில் மதிலமைக்கலாம்


பார்வையினைத் தீயாக்கி
...............பாவிகளைக் கானலாக்கலாம்
விதியினை அழித்துவிட்டு புது
............... விதியையும் உருவாக்கலாம்


ஊனத்திற்கு அனலிட்டு - பல
...............உலக சாதனைகளை நிகழ்த்திவிடலாம்
வாய் கண் செவி உதவின்றி - பல
...............வரலாறுகளை படைத்துவிடலாம்


கால் தொடரும் வேகத்தி

மேலும்

வரவிலும் கருத்திலும் மகிழ்ந்தேன் தோழரே .........மிக்க நன்றிகள் 07-Feb-2015 8:52 am
வரவிலும் கருத்திலும் மகிழ்ந்தேன் தோழரே .........மிக்க நன்றிகள் 07-Feb-2015 8:52 am
நல்ல நடை, நம்பிக்கை யூட்டும் வரிகள், வாழ்த்துக்கள் தோழா . 06-Feb-2015 11:29 pm
அருமை நடை 06-Feb-2015 11:19 pm
சதாசிவம் மதன் - இரா-சந்தோஷ் குமார் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
02-Feb-2015 6:13 pm

நமது தோழர்... புதுமை கவிஞர் கவிஜியின் அறிவிப்பு இது..

==தோழர்களே...... வரலாற்றில் நிகழ்ந்த ஏதாவது சில சம்பவங்களை நீங்கள் உங்கள் கருத்துக்கு இணங்க மாற்ற நினைத்ததுண்டா.....வாருங்கள்...... மாற்றுவோம்..... இது வரலாற்றை தவறாக சித்தரிக்கும் நோக்கமல்ல.... சே இன்னும் கொஞ்ச நாள் வாழ்ந்திருக்கலாம்..... அல்லது..... பகத் 25 வயதில் இறந்திருக்க வேண்டாம்.... கரிகாலன் மர்மமாக மரணித்திருக்க வேண்டாம்....இரண்டாம் உலகப் போரில் ஜப்பான் இத்தனை மோசமான அழிவை சந்தித்திருக்க வேண்டாம்..... இப்படி இன்னும் நிறைய..... இ (...)

மேலும்

யு கான்ட் ஹூ கேன்...................................... 03-Feb-2015 7:31 pm
முடியுமா அல்ல.. உன்னால் முடியும ! முடியாது என்று எதுவுமில்லை கயல்.. வாழ்த்துக்கள் 02-Feb-2015 7:15 pm
ஹா ஹா.. முயற்சி செஞ்சா முடியும்.. இந்த கதைக்காகவே ஒரு வரலாற்றை நீங்கள் தெரிந்துக்கொண்டால் அதுவே இத்தொடரின் வெற்றிதான்.. தங்கையே.. 02-Feb-2015 7:14 pm
நிச்சயம் முடியும் தோழியே...!! 02-Feb-2015 7:11 pm
சதாசிவம் மதன் - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Feb-2015 7:23 am

தோழியாய் நீ வேண்டும்.

தோள் சாயும் போதும்
தொடராமல் உன் காதல்
தொலைதூரம் போக வேண்டும்

வெற்றிக்குப் பின்னே
வெள்ளையாய் நீ வேண்டும்
விவசாயி நானென்றால்
விளைநிலமாய் ஆக வேண்டும்

உலகை நான் வெல்ல
உரமாக நீ வேண்டும்
ஊழல் ஏதுமில்லா
ஊடலும் நீ கொள்ள வேண்டும்

தூய அன்பு வேண்டும்
தொலையாத நட்பு வேண்டும்
என்றென்றும் உனைப்பிரியா
ஒய்யார உறவு வேண்டும்.

மேலும்

சதாசிவம் மதன் - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Feb-2015 7:22 am

உன் கன்னக்குழியில் நான்
கரைந்தே போனாலென்ன
நின் சின்னச் சிரிப்பில் யான்
சிதைந்தே போனாலென்ன
மீண்டுமொருமுறை
மீண்டு வந்து நான் - உன்னில்
தாண்டு போனாலென்ன
உயிரின்றி உறவாடுவேன் - உன்
ஓரக்கண்ணில் சிறை காண்கிறேன்
மறுஜென்மம் காணாமலே
உன்னில் உரமாகி
உயிர்வாழுவேன்.

மேலும்

சதாசிவம் மதன் - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Feb-2015 7:20 am

உன்னாலே உயிரானேன்
உலகறியப் பயிரானேன்
ஊமையாய் உனதன்பை
உணராமல் போனேனோ?

களையாய் என் பிழைதீர
முளையாய் நீ வழியானாய்
கிளையாய் நான் புகழ்சூட
மழையாய் நீ கருவானாய்

எந்தையாய் உன்னை
எண்ணிய போதெல்லாம்
ஏமாந்து பேனேனோ?
எந்தையும் தாயுமாய்
என்றுமே நீயாகும்
விந்தையும் காணாமல்!

அடர்ந்த உனதன்பின்
ஆழம் அறியாமல்
உன் - என் இடைத் தூரத்தை
முடிவிலியில் தொலைத்தேனே!

மேலும்

யாழ்மொழி அளித்த படைப்பில் (public) kayal vilzhi மற்றும் 5 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
30-Jan-2015 2:32 pm

அழுக்கில் கருப்பு நிறமாகிப்போன
ஏதோ ஒரு நிற கிழிந்தச்சட்டை
குளித்தறியாத மேனியின் துர்நாற்றம்
ஈக்கள் மொய்க்கும் மழலைக் கனியாய்
சாலையோரத்து சாபமாய்
பலவகை சாதங்களைக் கலந்து
காணக்கொடுமையாக தின்றுக்கொண்டிருந்தவனை
சற்றே கூர்ந்து கவனித்தாலொழிய
பார்வையற்ற பாலகனென்று தெரியாது ....

பலமுறை யோசனைக்குப்பின்
பேசியாகிவிட்டது
பேரென்ன..? ஊரென்ன..?
பிச்சைவாங்க காரணமென்ன.....?

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
பெருமூச்சு விடும்படியான
பெருங்கொடுமைதான்
பெற்றோரில்லாத பரிதாபத்தை
தெருவிலன்றி தேரிலா ஏற்றுவார்கள்.....

இருக்கவே இருக்கிறது
பரிட்சயமான கருணை இல்லம்
எல்லாம் பேசி சேர்த்தாகிவிட

மேலும்

அருமையான வரிகள் 24-Nov-2017 5:55 pm
மனம் தொடும் கவிதை 27-Aug-2015 4:35 pm
மனம் தத் கவிதை பாராட்டுகள் 02-Aug-2015 8:04 pm
படைப்பு என்பது துளியேனும் நெகிழ்த்த வேண்டும்.உங்கள் கவிதை துளியல்ல...மழையாய்... 11-Jun-2015 12:16 pm
சதாசிவம் மதன் - சதாசிவம் மதன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
01-Feb-2015 6:16 pm

ஒவ்வொரு மனிதனுள்ளும் ஒரு கவிஞன் ஒளிந்து கிடக்கின்றான். உள்ளத்து உணர்வுகள் தூரிகை வழியாக காகிதம் உரசுகையில் வண்ண ஓவியம் பிறக்கிறது. சொற்களை விஞ்சி ஒரு கற்பனை மூலமாய் கல் மறைந்து ஒரு கற்சிலையாகிறது. கறைகள் படிந்த காதைகள் கூட கவிஞரால் காவியமாகிறது.
தமிழ் இலக்கியத்தின் அடிப்படை வடிவம் கவிதையாகும். இது காலத்திற்குக் காலம் அரசியல், கலாசாரம், அறிவியல் என்பனவற்றின் தாக்கத்தால் மாற்றமுற்று ஈராயிரம் ஆண்டுகளுக்கு மேலாக வளர்ச்சியடைந்து வந்துள்ளது இன்னும் வளர்ந்து கொண்டே இருக்கிறது.
தமிழ் இலக்கியத்தின் ஆரம்பமாகக் கொள்ளப்படுகின்ற சங்க காலம், சங்கமருவிய காலத்தை எடுத்துக்கொண்டால், அங்கே அகவல்,வஞ்சி,

மேலும்

அருமை.. 01-Feb-2015 10:17 pm
நன்றி ஐயா 01-Feb-2015 8:29 pm
நன்று ...இன்னும் தொடர்க இதுப்போல் .....வாழ்த்துக்கள் ... 01-Feb-2015 8:25 pm
சதாசிவம் மதன் - சதாசிவம் மதன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
01-Feb-2015 6:45 pm

கட்டுச்சோறு கட்டிக்கிட்டு
காட்டுவழி போற மச்சான்
கிட்ட நானும் ஒட்டி வந்தா
இடந் தருவாயா – உந்தன்
கிட்ட நானும் ஒட்டி வந்தா
இடந்தருவாயா – மனசுக்குள்ள
இடந்தருவாயா?

பட்டப் பகல் வேளையிலே
பாட்டுக்கட்டி நான் படிக்க
கேட்டுக்கிட்டு நீயிருக்க
போய் வருவாயா - இல்லை
விட்டு விட்டு ஓடிநீயும்
போய் மறைவாயா?

பிட்டுடனே வாள மீனு(க்)
கூட்டுவச்சி நான் தரவா
கட்டித்தயிர் சட்டியையே
ஒட்டுமொத்தமாய்த் தரவா
வெட்டி வேலை பாக்கிறாயே
கிட்ட வா மச்சான் - எனக்கு
சட்ட வாங்கிப் போட்டுத் தாலி
கட்ட வா மச்சான்.

எட்டுப் புள்ள பெத்துப் போடு
பட்டுப்போல நான் வளர்க்க
மாட்டு வண்டி கட்டிப் போடு
நாட்டை நாம சுத்த

மேலும்

நன்றி 01-Feb-2015 7:35 pm
nallaa irukku thozhare thodarungal ......... 01-Feb-2015 7:29 pm
சதாசிவம் மதன் அளித்த படைப்பில் (public) vivekbharathi மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
01-Feb-2015 6:58 pm

நெஞ்சு கிளந்தௌ
வஞ்சி அழுந்திட
செஞ்சிறை போவென
சொல் கிளியே - தமிழ்
வஞ்சமுண்டென்றுநீ
சொல் கிளியே!


பஞ்சமெமக்கிலை
கெஞ்சலழகிலை
எஞ்சியவன் செவி
சொல்கிளியே - தமிழ்
தஞ்சமிலை என
சொல்கிளியே!

மாண்டவர் பூமியை
ஆண்டவர் நீயென
மீண்டெழுந்து நீ
சொல்கிளியே - தமிழ்
தாண்டுபோகாதென
சொல் கிளியே!

வெந்து சிறை படும்
எந்தனினத்தவர்
சொந்தமுண்டென்றுபோய்
சொல்கிளியே - தமிழ்
பந்தமுண்டென்று நீ
சொல் கிளியே!

ஊரையழித்திடும்
போரைப் படைத்தவர்
நாரையுரித்திட
செல்கிளியே- தமிழ்
பேரை உரத்து நீ
சொல் கிளியே!

கந்தகமாயொரு
முந்திய சந்ததி
தந்தது நாமென
சொல்கிளியே - தமிழ்
வெந்து தணிந்திட
நில்

மேலும்

் வரிகள் .....சிறப்பு .... 02-Feb-2015 1:57 pm
நன்றி நண்பரே 01-Feb-2015 7:43 pm
ஆகா அருமையான சந்தம் அழகிய கற்பனை கவின்மிகு சொல்வளம்......எல்லாம் அருமை அருமை.... கிள்ளை விடுதூது என்றதும் செந்தமிழ்க் கொள்ளை இலக்கியம் என்றெண்ணி - துள்ளியான் இவ்விடம் வந்தேனே ! உன்கவி கண்டதும் இவ்வா(று) உரைக்கிறேன் வாழ்த்து ! 01-Feb-2015 7:37 pm
நன்றி 01-Feb-2015 7:25 pm
மேலும்...
கருத்துகள்

இவர் பின்தொடர்பவர்கள் (11)

இவரை பின்தொடர்பவர்கள் (11)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
கி கவியரசன்

கி கவியரசன்

திருவண்ணாமலை ( செங்கம் )
மேலே