சிந்தனைகளே மறக்கின்றது

​புன்னகைக்கும் இளையநிலா
புத்தாடையில் இன்ப உலா !
புலம்பெயர்ந்த வெண்ணிலா
புலவர்க்கோ கருவான நிலா !

புதுமைகள்பல படைத்திடவே
புதினமாய் வந்த பூங்கொத்து !
புதியதோர் இராகம் கொண்ட
புத்துணர்வு தரும் புதுப்பாடல் !

சிற்பமொன்று சிரிப்பதனால்
சிந்தனைகளே மறக்கின்றது !
சிற்பிகளே நாணுகின்றனர்
சிங்காரமே உருவமானதால் !

ஓவியமொன்று காவியமாய்
தூவிய வாசமிகு மலர்களாய்
தூரிகை தீட்டிய வண்ணமாய்
காரிகை நீயுமிங்கே மிளிர்கிறாய் !

சிறிதும் குறைந்திடா சிரிப்புடனே
சிதைந்திடா அழகுடன் சிறப்புடனே
சிதறிடா சிந்தையுடன் வளர்ந்திடுக
சிகரமாய் வையத்தில் வாழ்ந்திடுக !

பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (7-Feb-15, 8:16 am)
பார்வை : 663

மேலே