சிரித்திடும் சிற்பமிவள்

..."" சிரித்திடும் சிற்பமிவள் ""...

கிராமத்து பதுமையிவள்
எழுதப்படா கவிதைபோல்
குடிலிலே குடியிருக்கும்
கோபுரத்தின் கலசமிவள் !!!

கருப்பாயியின் வெள்ளை
சிரிப்பு இவள்தம் தேகம்
சுருங்கினாலும் மனதில்
சோகம் கொண்டதில்லை !!!

சிறு முந்தானை தலைமூடி
பத்டைதீட்டா வைரமிவள்
முகத்தின் வாட்டம்போன்று
நிறம் மங்கிய ஆடையோடு !!!

பரந்துகிடக்கும் நெற்றியிலே
செந்தூரத்தில் பொட்டிட்டு
வளைந்த புருவத்தோடு
சுருங்கிய சிறு கண்கள் !!!

வெளுத்துவிட்ட சில முடியும்
வெள்ளைக்கல் மூக்குத்தியும்
முன் கழுத்தில் உறவாடும்
சாயம்போன ஒரு நகையும் !!!

காரையெலும்பும் வெளிவர
கை நரம்பு புடைத்திருக்க
கடினமான உழைப்பாளி
இந்த பாரதி கண்ணம்மா !!!

சோகத்திலே மறு உருவம்
துணையாக சேர்ந்து நிற்க
இன்பமும் துன்பமுமிங்கு
இரண்டற கலந்ததுவென்றே !!!

ஓவியனின் சிந்தனையின்
நாகரீகத்தின் வளர்ச்சியாலே
கைபேசியில் படம்பிடிக்கும்
எதார்த்தமான வடிவமைப்பு !!!

என்றும் உங்கள் அன்புடன்,,,,
அப்துல்ஹமீது(எ)சகூருதீன்...

எழுதியவர் : அப்துல்ஹமீது(எ)சகூருதீன்.. (12-Feb-15, 10:49 am)
பார்வை : 76

மேலே