காதல் வெண்பா மஞ்சள் வானம் 10
காதல் அந்தாதி 10 வது பா
இதன் வெண்பா வடிவம் :
பா :
-----
நெஞ்சின் நினைவுகளை நீலவிழியில் எழுதுகிறாய்
நீலவிழியில் மௌன மொழி பேசுகிறாய்
மஞ்சள் வான சங்கம மாலை எழிலே
காலமகள் எழுதிய கவின் ஓவியமே !
========================================================================
வெண்பா விதிக்குள் அமைத்த வடிவம் :
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
நீலவிழி தீட்டிடும் நெஞ்சின் நினைவுகளை
நீலவிழி பேசிடும் மௌன மொழியினை
மஞ்சள்வான் சங்கம மாலை எழிலினை
கொஞ்சம் உரைத்திடுவாய் நீ !
========================================================================
-----கவின் சாரலன்
தனிச்சொல் வாரா இன்னிசை வெண்பா .
இரு விகற்பமா பல விகற்பமா சொல்லவும்