என் அம்மா
சிறு வயதில் என்னோடு விளையாடிய முதல் தோழி நீ தானம்மா...
நான் கட்டிய மணல் வீடு இடிந்தால் என் கண் கலங்கும் என்பதால் நாள் முழுவதும் காவல் இருந்தாயே அம்மா...
அப்பா அடித்து விட்டார் என்றதும் என்னை கட்டி அனைத்து அப்பா தானே அடித்தார் என்பாயே அம்மா...
இப்போதெல்லாம் ஏதும் என்னை பெரிதாய் காய படுத்தவில்லை....
காயப்பட்டால் என் மனம் உன்னை தேடுகிறது அம்மா....
கல்லூரி விடுமுறையில் வீடு வரும்போது எனக்கென மீன் சமைப்பாயே அம்மா,
அதை வேண்டுமென்றே குறை கூறுவேன்...
ஏன் தெரியுமா???
என் மீது கோபம் வந்தால் உன் இதலால் அழுத்தமாய் முத்தம் கொடுப்பாயே அதனால்...
உனக்கு நினைவு இருக்கிறதாம்மா???
பத்தாம் வயதில் பள்ளி கொண்டு விடும் போது மழை பெய்ததே...
அதில் நீ நனைந்து என்னை முந்தானையில். மறைத்தாயே அன்று தான் உணர்ந்தேன் தாயும் தெய்வமும் ஒன்று என்று...
தங்கையை பார்த்துகொள் என்றாயே,...அதன் உள் அர்த்தம் இது தானா???
உன் அஸ்தியை கடலில் கரைத்ததும் கடல் அலைகள் கூட என்னை அணைக்கின்றன அம்மா,...அதற்கும் கற்று கொடுத்து விட்டாயா??? தாய் பாசத்தை...நான் அழ மாட்டேன் அம்மா,...என் அழுகை உனக்கு வருத்தம் கொடுக்கும் என்பதால்...
அடுத்த ஜென்மத்தில் நான் பெண்ணாக நீ என் மகளாக பிறக்க வேண்டும்,...என் கருவரையில் உன்னை சுமக்க வேண்டும்,... நீ தூங்கையில் தாலாட்டு பாட வேண்டும்...என் மார்பில் உனக்கு பாலுட்ட வேண்டும்,...
உனக்கென நான் பார்த்து பார்த்து மீன் குளம்பு செய்து தர வேண்டும்...
என்றும் என் இதயத்தில் வாழும் என் தேவதைக்கு சமர்பணம்...