அம்மா என்ற வார்த்தையில் ஒரு விந்தை
ஆயிரம் மொழிகளில் தேடி பார்த்தேன்
தாயை எவ்வாறு அழைப்பர் என்று
திகைத்து போனேன் ஒரு நொடி
'ம' என்ற எழுத்து இன்றி
ஒரு மொழிலும் இல்லை!
அப்பொழுது தான் புரிந்தது அம்மா
அவள் உலகிற்கே பொதுவானவள்
அவளை மொழி, மதம், நாடு என்று
பெயர் சொல்லி பிரிக்க இயலாது என்று!
வள்ளுவன் அல்ல இறைவன்
நமக்காய் படைத்த உலக பொதுமறை
அம்மா நீ
உனக்கே சமர்ப்பணம் இந்த உயிர்!