ஹைக்கூ சென்றியு கவிஞர் இரா இரவி
ஹைக்கூ ! சென்றியு ! கவிஞர் இரா .இரவி !
சில நொடிகள்
வாழ்நாள்
மின்னல் !
நட்டமில்லை
பிரிந்த இலையால்
கிளைக்கு !
நடக்கும்
பிணம்
குடிகாரன் !
மையில்
கொடிய மை
வறுமை !
வருந்துவதில்லை
சுமைக்காக
ஆமை !
நிறம் இல்லை
உருவம் இல்லை
தண்ணீர் !
வருந்தியது
பறவைகளுக்காக
பட்ட மரம் !
அகத்தின் கவலை
முகத்தில் தெரியவில்லை
அவளுக்கு !
நடமாடும்
அனல் மின்சாரம்
அவள் !
தூங்கவிடாமல் செய்வதே
கனவென்றார் கலாம்
தூங்கவிடவில்லை அவள் !
வெட்ட வெட்ட வளரும்
நகமாய்
அவள் நினைவு !
ஆடிப்பட்டம்
தேடிவிதைத்தும்
நட்டம் !
கொள்ளயடித்த பணத்தில்
ஒருநாள் அன்னதானம்
அரசியல்வாதி !
.