பணத்தால் வருவதில்லை சந்தோசம்

அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என
அனுபவம் சொன்னது பொய்யில்லை உண்மை

பாட்டியும் குட்டிப் பாப்பாவும் அழகு - அவர்தம்
பட்டுப் போன்ற உள்ளத்தில் தூய்மையும் அழகு...

வஞ்சகம் இல்லா நெஞ்சகம் கொள்வோர்
வாழ்க்கை எப்போதும் அழகோ அழகு....

வாய்விட்டு சிரித்து நோயின்றி வாழ்வோர்
வறுமையில் வாழ்ந்தாலும் அவர் வளமையே அழகு...!!

எழுதியவர் : ஹரி (4-Mar-15, 12:41 am)
பார்வை : 156

மேலே