என்னவனே அறிவாயா

எங்கிருந்தோ வந்தாய் .
எனக்காக என்றாய்.
உறவென்று நினைத்தேன்.
உயிர் பறித்து ஏன் மறைந்தாய் .?

தவறென்ன செய்தேன் நான்
தவிக்க விட்டு பிரிந்ததென்ன
மறக்க நினைக்கும் உன்முகம்
மறுபடி வருவதென்ன .?

அன்பை மட்டும் அளித்த எனக்கு
கண்ணீரை பரிசளித்து
கைதட்டி ரசிப்பதென்ன .?

காயங்கள் தந்ததினால்
கை கூப்பி நான் தொழுதேன்
கருணை சற்றும் இல்லாமல்
எட்டி உதைத்து சென்று விட்டாய்.

என்னவனே அறிவாயா
என் உயிர் நீ என்று
உன்னைப் பிரிந்து நான் இங்கு
உயிரற்ற பிணம் என்று....:-(

எழுதியவர் : கயல்விழி (5-Mar-15, 5:31 pm)
Tanglish : ennavane arivaayaa
பார்வை : 385

மேலே