சத்தமில்லா உன் விழியாலே
சட்டுன்னு தான்
என்ன சாய்ச்சிபுட்ட
சத்தமில்லா
உன் விழியாலே...!!!
அத்துவான காட்டுக்குள்ளே
அருவிச்சத்தமா
மனசுக்குள்ள
புகுந்து நீயும்
கூச்சல் போட்டுட்ட...!!!
இணுங்காமதான்
நுழைஞ்சிப்புட்ட
என்னிதய
கூட்டுக்குள்ளே...!!!
வானவில்ல
தொட்டுச்செல்லும்
மழையைப்போல,
இணுங்காம என்னிடுப்ப
கிள்ளிப்புட்ட ...!!!
நானும் சிணுங்காம
சிணுங்கிபுட்டென்
சில்லறை சலித்திடும்
சல்லட போல...!!!
சத்தம் கேட்டு, சத்தம் கேட்டு,
சர சரக்கும் சாரை போல
மூச்சு காத்து வேகத்துல
முழுதும் கரஞ்சிட்டேன்...!!!