மரமொன்று தாலாட்டுது

மரமொன்று பாடுது
தாலாட்டு
தாயில்லாப் பிள்ளையைப் பார்த்து!

ஆராரோ ஆரிராரோ
என் கண்ணே!
கலங்காதே என் கண்ணே
பசி வந்தால்
பழம் தர நானிருக்கேன்!
வியர்த்தால்
விசிறி விட நானிருக்கேன்!

ஆராரோ ஆரிராரோ
என் கண்ணே!
தாய் தான் மறைந்தாளோ
தரணியிலே உனை விட்டு!
அழுதிடாதே என் கண்ணே
அம்மாவாய் தாலாட்ட
நானிருக்கேன் நம்பி நீ
மரக்கிளையில் ஊஞ்சல் கட்டு!

ஆராரோ ஆரிராரோ
தாய் தான் இல்லையென்று
தவிக்காதே தங்கமகனே
நோய் வந்தால் காப்பாற்ற
நானிருக்கேன் என் கண்ணே!

ஆராரோ ஆரிராரோ
தாகம் வந்தால் நீர் தர
தாயாய் மாறி மழையே தருவேன்
கலங்காதே என் கண்ணே!

ஆராரோ ஆரிராரோ
உறங்கிடடா என் கண்ணே!
உன் தாய் இறந்தால் என்ன
தாயற்றவருக்கெல்லாம் தாயாக
நானிருக்கேன் தூங்கு
ஆராரோ ஆரிராரோ

எழுதியவர் : சுமித்ரா விஷ்ணு (16-Mar-15, 7:28 pm)
சேர்த்தது : சுமித்ரா விஷ்ணு
பார்வை : 90

மேலே