கோட்டோவிய மழலைகள் - 13 A கருணா
தாத்த்த்தா..
தாத்தாஆஆஆ..
தா...தத் ..தா..
தத்தா..
எனக்கு வயது அறுபது ஆனால் என்ன..
என் பேரன்
அறுபதுக்கு மேல் பல
ராகங்களில்
என்னை
அழைத்து மகிழ்கிறான்..
..
செல்லகுட்டி..
அப்புக்குட்டி..
பாட்டிய அடிக்கட்டா..
..வீல் என்று அழுகிறான்..
..
இப்போ பாட்டி
என்னை அக்கிறாங்க...ம்ம்ம்ம்ம்.
அழுவது போல் நடிக்கிறேன்...
விட்டு விட்டு
வயிற்றிலிருந்து
சிரிக்கிறான். ..நடிக்காமல்
குழந்தை..
..
இது கூட
ஒரு கோட்டோவிய மழலைகளின்
கார்ட்டூன் தானே ..
சிரிக்கட்டும்..!