இதுவும் கூட கடந்து போகும்

அரசன் ஒருவன் பாரசீகம் ஆண்டான்
விரலில் முத்திரை மோதிரம் பூண்டான்
அதிலோர் உண்மை நெறியைப் பதித்தான்
அதனை கண்கள் முன்னே விரித்தான்.
பார்வை ஒன்றில் ஆலோசனை பெற்றிட
எம்மாற்றமும் மாற்றத்திற்குப் பொருந்தும்
புனித சொற்கள் அவை இவை ஆகும்
“இதுவும் கூட கடந்து போகும்”

பாலை வழிவரு ஒட்டகத் தொடரினில்
சாமர்கண்டின் வைரங்கள் வந்தன;
கடலோடுங் கப்பல் வரிசை பலவும்
அதற்கிணையான முத்துக்கள் கொணர்ந்தன;
ஆயினும் அதில்தம் லாபம் எண்ணாமல்
சுரங்கப் பொன்னோ அல்லது பொருளோ
என்ன சொத்து இதுவென அலுத்துக் கூறுவன்
இதுவும் கூட கடந்து போகும்

எழுதியவர் : தா. ஜோ. ஜூலியஸ் (தியோடர் புல (18-Mar-15, 5:40 pm)
பார்வை : 188

மேலே