குளிர் நிலவே
கனலாய் கொதிக்கும்
கோடை காலத்தினில்
அனலாய் தகி தகிக்கும்
ஆதவனின் அக்கினி பார்வையின்
வெட்பப்புனல் பொழிவிலிருந்து
தப்பிப்பிழைத்து தலை மறைக்க
கொட்டி குழுமி குவியுகின்றனர்
ஆங்கே, உலகின்
உய(யி)ர் குளிர் நிலவென
நீ இருக்கும் உயர் நம்பிக்கையில் .
ஈதறிந்தும், மாதரசியே
ஒவ்வொரு கோடை விடுப்பிலும்
பொன்னாய் மின்னும்
நின் மிளிரெழில் தளிர் பாதங்களை
அண்டை மாநிலங்களிலேயே
பதிப்பதுமேனோ குளிர் நிலவே !!