வாழ்க வாழ்க

கண்ணாடிச் சாளரம்
மிக நீண்ட வரிசை
எனக்கு பின் ஒரு முதியவர்.
பத்தாவது ஆளாய் நான்.

போக்குவரத்து நெரிசல்
சாலையை கடக்க பிள்ளையர்
யாரெனக் காட்டும் கோழைச்சூரியன்
நிற்காமல் விரையும் நான்.

செவிசேரும் சொட்டென்ற சத்தம்
மூடிச்செல்லென மன்றாடும் குழாய்
முப்பது பேரும் முழுச்செவிடராய்
முப்பத்தொன்றாய் நான்.

பெட்டி முழுதும் கூட்டம் கூட்டம்
இடமடைப்பதே மக்கள்தொகையனில்
தொப்பைகளையும் சேர்த்துக் கூட்டலாம்
மூச்சுமுட்டும் குழந்தை. சங்கிலி இழுக்காமல் நான்.

பொது இடத்தில் அசிங்கம் செய்யாதீர்.
என்னென்னவோ செய்கிறார்
காதலர்களாம் காதலர்கள்.
திட்டிச்செல்லாமல் கடக்கும் நான்.

இந்தியாவின் கிழிசலைத் தைக்கும்
ஊசி நான் என அறியாமல்
வெளிநாடுகளை உயர்த்திப் பேசும்
வெட்டி உதட்டாளன் நான்.

எனக்கும் மனிதன் என்ற
பெயர் வைத்திருக்கும் அறிவியல்
வாழ்க வாழ்க.
--கனா காண்பவன்

எழுதியவர் : கனா காண்பவன் (18-Mar-15, 11:54 pm)
Tanglish : vazhga vazhga
பார்வை : 81

மேலே