நேற்றுகளுடைய நரைத்த ஏடுகளிலிருந்து

நேற்றுகளுடைய நரைத்த ஏடுகளிலிருந்து
======================================

சாயம் பூசிய முகங்களுக்கு
சொந்த துக்கங்களை
புறங்கூறும் அவசாசங்களில்லை
அவைகள் மற்றவர்களுக்கென
அவகாசப் பட்டவைகளாகின்றன
சிலபொழுது எல்லாமொதுக்கி
அச்சாயத்திற்கப்பால்
முறுவலிக்கும் நிலையும் கூடி ம்ம்ம்,,,,!!!
கதைசுமந்த ஈரக்குலைகள்
திறந்த புத்தகமாக
ஒருபோதும் இருப்பதில்லை,
பெய்துமறைந்த மழையும்
காற்றில் விழுந்த இலைகளும்
ஓடி இணைகின்ற ஓடைகளோடு
கரை கவியாதொழுகுவதைப்போல
துறாதமழையாக
தேங்கிக்கிடக்கின்ற
தாங்கா பாரங்கள் உடைகின்றபோது
பின்னேயும் பேயும்
அந்தந்த கட்டங்களின் நேசம்,,,,,,,,,!!!
காய நெஞ்சங்களோடு
நோவு கொண்டே மாய்கின்ற
வைகறையைப்போலும்
ஏதோவொரு மரக்கிளையின் கூட்டில்
துணை சேர்ந்தேறிடவே
ஓரி இசைக்கின்ற
இராப்பைங்கிளி கூட்டங்களைப்போலும்
பிரியபந்தங்கள் பிரிகின்றபோது
முல்லைப்பூ கன்னங்களில்
சிரிமாயும் நொடியில்
மௌனம் தொடுகின்ற தனிமைக்கு
இணைபோகின்ற ஒளிந்த உன்னல்கள்
இன்னும் இன்னும்,,,,,,,,,,,,,!!!!

அனுசரன்

எழுதியவர் : அனுசரன் (20-Mar-15, 10:39 am)
பார்வை : 67

மேலே