காதல் டோக்கன்

காதலென்ன
கடைச்சரக்கா
கண்டவருக்கெல்லாம் வாரி வழங்க
காதலென்ன
கற்பழிப்பவருக்கு டோக்கனா
காதலென்ன
ஏமாற்றுபவருக்கு
வழங்கப்படும்
முன் ஜாமீனா
காதலென்ன
ஆதாயம் தேடுவோருக்கு
ஆதார் அட்டையா
காதலென்ன
பெண்மையை இழிவுப்படுத்த
தரப்பட்ட
தகுதிச் சான்றிதழா
காதலை
கேவலப்படுத்தி
நீங்களும்
கேவலப்படாதீர்கள்!
காதலைச் சொல்லி
எதையும் தேடாதீர்கள்!

எழுதியவர் : சுமித்ரா விஷ்ணு (20-Mar-15, 7:49 pm)
பார்வை : 106

மேலே