கால மாற்றம்
மழலை வயதில் சில்வண்டு ஆட்டம்
சிறார் வயதில் சிறகடித்து ஓட்டம்
அரும்பு வயதில் ஆசைகளின் கூட்டம்
பருவ வயதில் பாவையர் மீது நோட்டம்
திருமண வயதில் காதல் கூடும்
துணிந்த வயதில் வாழ்வில் ஓட்டம்
பாதி வயதில் குடும்பத்தின் தாக்கம்
அனுபவ வயதில் நிதான போகம்
தள்ளாடும் வயதில் தீராத ஏக்கம்
வாழ்வின் பருவ நிலை மாற்றம் ..........