அடியேன் இந்த பாண்டியன் கிறுக்கிய இந்த கிறுக்கல்லும் அழகா

உங்கள் இல்லற வாழ்க்கை சிறக்க உங்கள் மனைவியை பாராட்டுங்கள்
என் மனைவின் பிறந்த நாளில்
அடியேன் இந்த பாண்டியன் கிறுக்கிய இந்த கிறுக்கல்லும் அழகா ?
என்பதை இதை முழுவதும் படித்த நீங்கள் எழுதும் தீர்ப்பே நிஜ அழகு
எத தீர்ப்பையும் நற் தீர்ப்பாய் எடுத்து கொள்வதே என் அழகு.
இனி கவிதை சொல்வதே எனக்கு அழகு
அன்பிற்ககினியவளே, அன்னையானவளே.அன்னமிடவளே
உனக்காக நான் தீட்டிய இந்த கிறுக்கலும் கவிதைதானோ?
படித்தபின் நீ எனக்கு சொல்வாயோ தமிழ் அழகே
நாட்டிய நங்கை போல் நீ நடக்கும் உன் நடையழகு,
பட்டு வண்ண பூச்சினை போல் நீ உடுத்தும் உன் உடையழகு,
குறும்பு விழியாலே நீ தொடுக்கும் கணையழகு;
கரு மேக கூட்டம் போல் சுருள்விழுந்த உன் சிகையழகு,
தெற்றுப்பல் காட்டும் உன் முத்துப்பல் நகையழகு;
மழலை மொழி மாறாமல் நீபேசும் வகையழகு;
உன்னை நினைத்து நான் பெருமை கொள்கிறேன்
ஒளிந்துவந்து உன் கரங்களுக்குள், எனை அணைக்கும் உன் பிடி அழகு;
உன்மூச்சை நானுணர, என் மூச்சை நீ உணர வியந்து நிற்கும் அந்த நிணைவழகு
காதலென்ற அன்புக்கு உயிரூட்டும், நம் உறவழகு;
புண் முறுவல் மாறாமல் நீ நகைக்கும் புனைகை தான் பேரழகு
சாய்ந்து நான் போகையிலே ஆறுதலாய் தோல் கொடுக்கும் உன் தோழழகு;
சோர்ந்து நான் இருக்கயிலே சக்தியாய் ஆறுதலாய் எனை தேற்றும் உன் வார்தைதான் எத்தனை அழகு
நீ தூங்கா நான் தூங்கி விடியுமுன்னே கண்விழித்து
கையில் லெமன் சாருடன் எனை எழுப்பும் என்னவனே நீயழகு;
எழுந்தவுடன் பல் விலக்க செல்லமாய் கண்டித்து எனை அனுப்பும் உன் கண்டிப்பு ஒரு அழகு
எத்தனை ஜென்மங்கள் எடுத்தாலும் அத்தனை ஜென்மத்திலும்என் மனைவியான அன்னையாக நீ வருவேதே எனக்கு அழகு
தூங்காமல் நீ விழித்திருந்து என்துயிலை நீ இரசித்திருந்த அந்த இரவுகளும் தனி அழகு
மரியா நீ பிறந்த நாளில் உன்னை வாழ்த்தி உன்னை வணகுவதே எனக்கழகு
இருவரையும் இணைத்து வைத்த இறைவன்தான் எத்தனைக் அழகு
நாம் இருவரும் சேர்ந்து இறைவனுக்கு நன்றி சொல்வதே நமக்கு பேரழகு
இதை படிகின்ற ஓவவருவரும் அழகோ அழகு
இல்லற வாழ்க்கையை இனிதே அமைத்திட்ட இறைவனுக்கு எங்கள் கோடானு கோடி நன்றிகள்
மை சூ பாண்டியன்