கிறுக்கன் கிறுக்கி கிறுக்கல்கள்
![](https://eluthu.com/images/loading.gif)
கிறுக்கன் கிறுக்கி கிறங்கினாள் அக்கிறுக்கி
காதல் கிறுக்கல் தனில்
(குறட் பா )
கிறுக்கிய தெல்லாம் கவிதை அல்ல
உருக்கிய தெல்லாம் பொன்னும் அல்ல
பெருக்கிய தெல்லாம் குப்பையும் அல்லவே
(நிலை மண்டில ஆசிரியப்பா )
கிழக்குவான் கீறல் விடியல் எனினெழில்
மேற்குவான் கீறல்கா தல்
(குறள் வெண்பா )
தேரா ரசிகா சொல்வது அறிவாய்
யானோ கவிஞன் யானோ கிறுக்கன்
யானெ ழுதுவது கிறுக்கல் கிறுக்கல்
வரிகளில் தெரித்து விழுவ தெல்லாம்
முத்துக்கள் இல்லை கிறுக்கல்கள் காண்பாய்
( நிலைமண்டில ஆசிரியப்பா )
கவின் சாரலன்