நெருப்புக் கோழியின் நடனம்

மயில் ஆடினால்
மகிழும் நாம்
நெருப்புக் கோழி ஆடினால்
காண்போமா..?
இரண்டுக்கும் தோகை
இருந்தாலும்
மயிலிடம் உள்ள அழகு
நெருப்புக் கோழியிடம் உண்டா...?
எது எது யார் யார்க்கும் அழகோ
அதுவே அவரவர்க்கு கடமையாகும்!
குயில் பாடினால் ரசிக்கும் நம்மால்
கோட்டான் பாடினால்
கேட்க முடியுமா..?
அவரவர் கடமை
அவரவர் ஆற்றுதலே சிறப்பு!

எழுதியவர் : சுமித்ரா விஷ்ணு (4-Apr-15, 12:46 pm)
சேர்த்தது : சுமித்ரா விஷ்ணு
பார்வை : 163

மேலே