சிந்தனை

சிந்தை:1
காசு கொடுத்த கடவுளை பார்த்து,
கடவுளுக்கும் காசு கொடுத்து,கடைசில
கடவுள்கிட்டையே காசு வேணும்னு
கேக்குறவன் தான் மனுஷன்.

சிந்தை:2
எவ்வளவு சேவை செய்கிறோம் என்பதை
விட செய்யும் சேவையை அன்புடன்
செய்வதே முக்கியம். எவ்வளவு கொடுக்கிறோம்
என்பதை விட கொடுப்பதை அன்புடன்
கொடுப்பதே முக்கியம்.

சிந்தை:3
மற்றவர்கள் நம்மைப்பற்றி என்ன
நினைக்கிறார்கள் என தெரிந்து கொள்ளும்
ஆர்வத்தை குறைத்தாலே மீதி வாழ்க்கை
நிம்மதியாக இருக்கும்

சிந்தை:4
காயங்கள் தாங்காமல் கல் தெய்வமாவதில்லை
வருத்தங்கள் வராமல் வாழ்வில் வசந்தம்
வருவதில்லை.

எழுதியவர் : கவிஞர் முஹம்மத் ஸர்பான் (5-Apr-15, 12:27 am)
Tanglish : sinthanai
பார்வை : 675

மேலே