முதல் அனுபவம்

"போலாமா மச்சான்?"
" டேய்.. ஏன்டா..சந்தோஷ் வரலையா?"
"போடா.. விக்கி..அவன் ஏதோ நாம போககூடாத இடத்துக்கு போற மாதிரி ஓவரா பேசுறான். நாம போலாம்" என்று பதிலுரைத்தான் தினேஷ்.
"எப்டிடா.. ஹாஸ்டல் ல சேந்து பிரண்ட்ஸ் ஆகிருக்கோம். விட்டுட்டு போனா நல்லா இருக்காது மாப்ள.இரு நான் போய் பேசுறேன்"
சந்தோஷ் அறையை நோக்கி நடந்தான் விக்கி.
மூவரும் புறப்பட்டனர். சந்தோஷ் வழியில் சற்று ஏதும் பேசாமல் வந்துவிட்டு பேச்சை ஆரம்பித்தான்.
"என்னை அடிக்கச் சொல்லி போர்ஸ் பண்ணமாட்டீங்கல்ல.?" தயங்கிய குரலில் கேட்டான் சந்தோஷ்.
"டேய் ரூம் ல தான சொன்னேன்.. இதுல போர்ஸ் பண்ண என்னடா இருக்கு உனக்கு பிடிச்சா நீ குடிக்க போற.. என்னடா தினேஷ்?" என தினேஷ் ஐ பார்த்தான்.
"நாங்க குடிக்கிறோம். நீ சும்மா இரு.. அப்புறமா ஒன்னா போய் சாப்பிடுவோம்." என தினேஷ் சந்தோஷ் ஐ ஆறுதல் படுத்தினான்.
இவர்களின் வார்த்தையினால் சந்தோஷ் எப்போதும் போல மகிழ்ச்சியாய் பள்ளி வாழ்க்கை ஐ சொல்லி சிரித்துக்கொண்டே நடந்தார்கள்.
பதினைந்து நிமிட நடைக்கு பின் "TASMAC - அரசு பார் " என பெயர் பலகை வைக்கப்பட்டுள்ள கடையை வந்தடைந்தனர்.
இப்போது லேசாக சந்தோஷின் மனதில் நெருடல் தொடங்கியிருந்தது. கடையின் தோற்றத்தை பார்த்துக்கொண்டிருந்தான்.
நண்பர்கள் இருவரும் சென்று இரண்டு பீர் பாட்டில்கள் அப்புறம் ஒரு ஜான் அளவுள்ள ஒரு பாட்டிலுடன் திரும்பினார்கள்.
தகர அட்டை போடப்பட்ட பந்தலின் உள்ளே நுழைந்தார்கள். சந்தோஷ் மெதுவாய் அவர்களை பின் தொடர்ந்தான்.
சிமெண்டினால் செய்யப்பட்ட நைஸ் ஆன கற்கள் இருக்கைகளாகவும் மேசைகளாகவும் இருந்தன.சற்று நேரத்தில் காளான் பொரியல், சிக்கன், முறுக்கு என சைட் டிஷ் மேசைக்கு வந்தது. சந்தோஷ் முறுக்கிலிருந்து ஒவ்வொன்றாய் கொரிக்க ஆரம்பித்தான்
ஐந்து நிமிடம் சென்றிருக்கும்.தினேஷ் ஆரம்பித்தான்.
"ஏன் நீ குடிக்க மாட்ர... மீசை வளந்துருக்குள்ள.. நீ ஆம்பிள்ள தான.. குடிச்சா தான் ஆம்பிள்ள.. இல்லனா பொட்டை..நீ ஆம்பிளயா..?"
" டேய் மச்சான் சும்மா இருடா.." விக்னேஷ் சொல்லிவிட்டு பீரில் வாயினை வைத்தான்.
"இல்ல மச்சான்.. வாடா சரக்கடிக்க போலாம் னு கூப்பிடுறேன். சரக்கடிப்பிங்கலடா னு கேக்குறான்.கேட்டுட்டு கேவலமா ஒரு மாதிரி பாக்குறான்.
சந்தோஷ் கையிலிருந்த சிக்கன் ஐ வாய்க்கு கொண்டு போகாமல் அதிர்ச்சியில் அமர்ந்திருந்தான். நெருடல் அதிகமாயிருந்தது.
தினேஷ் மேலும் " டேய் இந்தா நீ இப்ப குடிக்கிற.." என்றபடி சிகரெட்டை எடுத்து பற்ற வைத்தான்.
" இல்ல குடிக்க மாட்டேன்.. எனக்கு வேண்டாம்"
"பொட்டை.."
சந்தோஷ் கு சுருக்கென்று இருந்தது.
கண்ணில் கோபம் கொண்டு தினேஷ் ஐ பார்த்தான்.
"குடிக்கல னா அப்டிதான் கூப்டுவேன்... பொட்டை.." வார்த்தையில் எண்ணத்தை வைத்து நிறைவேற்ற தொடங்கினான் தினேஷ்.
சந்தோஷின் கண்களில் கோபம் அதிகமாகி கண்ணீர் எட்டி பார்த்தது.
" ஏய்.. சும்மா இருடா நீ வேற.. இப்ப பீர் குடிப்பதால ஒன்னுமே ஆகாதுடா.. இப்பலாம் பொண்ணுங்களே ஒயின் குடிக்கராலுக. தெரியுமா.?" தன்னுடைய பங்கை சேர்த்தான் விக்கி.
சந்தோஷ் மௌனமாகவே இருந்தான்.
"சரி.. நீ ஒன்னும் பண்ண வேண்டாம் இந்த பாட்டில் ல கொஞ்சம் கைல வச்சிரு." என பீர் பாட்டிலை சந்தோஷின் கையில் கொடுத்தான் விக்கி.
சிக்கன் ஐ தட்டில் வைத்துவிட்டு பாட்டிலை வாங்கிக்கொண்டான் சந்தோஷ்.
"மச்சான் என் ஸ்கூல் பிரண்ட் சன்னதி இருக்கல்லடா.. அவளுக்கு மெசேஜ் பண்ணேன் ரிப்லையே பன்னமாட்ராடா." தினேஷ் விக்கியிடம் புலம்ப தொடங்கினான்.
சந்தோஷ் கையில் பாட்டிலோடு உக்காந்திருந்தான்.போராட்டம். மனதிற்கும் அவனது மூளைக்கும். மனது வேண்டாம் அதை போட்டுவிடு என்றது. மூளை "பொட்டை " என்ற சொல்லை அடிக்கடி உச்சரித்து காட்டியது.
ஐந்து நிமிடங்களுக்கு பின்..
சந்தோஷ் வாயில் பீர் பாட்டிலின் வாய் இருந்தது. மூளை அவன் மனதை தோற்கடித்திருந்தது.
****குடிப்பவர் அனைவரது மனதிற்கும் தெரியும் குடி கேடு தரும் என்று*******