முளைத்தல்

விதை புதைந்தால் விருட்சம் !
மக்கும் குப்பை புதைந்தால் உரம் !
தங்கம் புதைந்தால் புதையல் !
தண்ணீர் புதைந்தால் மழை !

மனதுக்குள் காதல் புதைந்தால்?
மௌனத்தில் கவிதை புதைந்தால்?
மலருக்குள் தேன் புதைந்தால்?
இருளுக்குள் நிழல் புதைந்தால்?

புதைந்தால் முளைத்தல் வேண்டும்
முக்குளிக்கும் போது
முத்தோடு எழுதல் போல...

ஒவ்வொரு புதைப்பும் விதைப்பாய் இருத்தால்
அழிவென்பதில்லை உலகத்தில்...

எழுதியவர் : வினு (11-Apr-15, 4:04 pm)
பார்வை : 316

மேலே