அகலா விலகல் -2
புல்வெளி சமவெளி
பூங்கா மரத்தடி
தேவாலய வாசற்படி
கோயில் பிரகாரங்கள்
யாருமற்ற வீதியின்
பெருங்கட்டிட வெற்றிடம்
எவரும் இதுவரை
நிற்காத நீரலைப் பரப்பு
வெள்ளை மரமல்லி பூப்பாதைகள்
மஞ்சள் தூங்குமூஞ்சி மலர் படுக்கை
சுடுமணலின் கொதி கதிர் கீழ்
..................................இங்கெல்லாம்
அலைந்து திரியும்
பித்தன் நானென அடிக்கின்றனர்
பலரும் ......
அறியமாட்டார்கள் அவர்கள்
உன் புன்னகை வழிசலோடு
என் குறும்பு விரல் அசைவுகளின்
ஸ்பரிசத்தோடு
உன் கன்னத்துக் குழிகளில்
நீ தேக்கி வைத்த
என் முத்த வடுக்களை
நான் தேடியலைகிறேன்
ஒரு மழைபொழிவின்
அகலமெனும் தூரத்தில் நீ
விலகிய நொடிகளில் இருந்து ...!!