தமிழன் - சில அடையாளங்கள் - கற்குவேல் பா

தமிழன் - சில அடையாளங்கள்
#########################
தாய்மொழி தமிழாக இருப்பினும் ,
நுனிநாக்கு ஆங்கிலம் அவையில்..
ஓட்டுகளை இவர்கள் விற்பதும் ,
அவர்கள் வாங்குவதும் நடப்பு ..
உழைப்பு உதிரத்தில் உண்டினும் ,
இலவசம் பெறுவது இயல்பு ..
பணம் கொண்டவன் தலைவனாக ,
மூளை அற்றவன் தொண்டனாக ..
மொழி ஒன்றுசேர்க்க என்னினும் ,
ஜாதி மதமென பிரிந்திருக்கும் ..
ஊரைகூட்டிப் போட்ட தாலிக்கயிறு,
ஏதோஒரு முச்சந்தியில் அறுபடும்..
நடிகனுக்கு பாலபிசேகம் ஒருபுறம் ,
தலைவனுக்கு சிருநீரபிசேகம் மறுபுறம் ..
பள்ளிச் சுற்றுச் சுவரிலும் ,
பட சுவரொட்டிகள் அரங்கேறும்..
வீட்டிற்கு கிடைக்காத மின்சாரம்,
கட்சி அலுவலகத்திற்கு கிடைக்கும் ..
வேட்டிக்கு சட்டம் வகுத்திருக்கும் ,
வீர விளையாட்டு தொலைந்திருக்கும் ..
ரேசனில் சேமித்த காசுகள் ,
அரசு மதுபானக்கடை அடையும் ..
நாணயம் வெளிப் பையினில் ,
லஞ்சமும் ஊழலும் உள்பையில் ..
குண்டர் சட்டம் புத்தகத்தோடு ,
குண்டர்கள் ஊருக்கு ஊர் ..
ஆணைகள் வெளியான பிறகும்,
ஆற்றுநீர் ஊர்வந்து சேராது ..
மீன்பிடிக்க கடல் செல்லக்கூடும் ,
தன் உடைமைகளை இழக்க ..
மரம்வெட்ட அருகே செல்லக்கூடும் ,
தனது உயிரினை இழக்க !!!
- கற்குவேல் .பா