எலிப்பொறி - பகுதி - 01
எலிப்பொறி-01
க(வி)தை
வேய்ந்த பனையோலை குடிசை
விரிசல் கொண்டதாய் சுவரு
குடியானவன் வாழும் வீடு
சுற்றிலுமாய் ஆடு மாடு....
பனையோலை குடிசை வீட்டில்
அடுக்கி வெச்ச நெல்லு மூட்டை
அப்பப்ப எலி கடிச்சி
அங்கங்கே நெல்லு சிதறல்...
குடிசைக்கு சொந்தக் காரன்
எலி தொல்ல தாளாமதா(ன்)
எலிப்பொறி தான் வாங்கி வந்தான்
பொஞ்சாதிய கூப்பிட்டு சொன்னான்
சுவரு விரிசல் பார்வை வச்சு
பார்திடுச்சி சுரண்டல் எலியும்
எலிப்பொறி.. எலிப்பொறி..என்றே சொல்லி
எகிறி வெளியில் ஓடலாச்சு...
கண்ணில் பட்ட சேவல் கிட்ட
"ஆபத்து சாக்கிரத
வீட்டுக்குள்ளே எலிப்பொறி இருக்கு"
கத்தியே கூப்பாடு போட
கேலியா சேவல் சிரிச்சி
"உனக்குத்தான் எலிப்பொறி எல்லாம்
எனக்கில்ல ஆபத்து போன்னு"
எக்காளம்தான் போட்டுத் திரிய...
எதிர் வந்த பன்றி நோக்கி
"ஆபத்து சாக்கிரத
வீட்டுக்குளே எலிப்பொறி இருக்கு"
கத்தியே கூப்பாடு போட
நக்கலா சிரிச்ச பன்றி
"உனக்குத்தான் எலிப்பொறி எல்லாம்
எனக்கில்ல ஆபத்து போன்னு"
எக்காளம்தான் போட்டு திரிய...
அடுத்ததாக ஆடு மாடு
அத்தனைக்கும் எலிப்பொறியோட
ஆபத்ததான் எடுத்தே சொல்ல
அத்தனையும் ஏளனம் பேச
எலியின் முகம் வாடிப் போச்சே...
எலிப் பொறியில் தீனி வெச்சி
வீட்டுக்காரி சந்தோசமா
எலிபிடிக்க காத்திருந்தா
நள்ளிரவு நேரத்திலே
"பொட்"டுனுதான் சத்தங் கேட்டு
என்னாச்சுன்னு பாக்க எழுந்தா
குடியானவன் பொன் ஜாதியுந்தா....
மினுமினுன்னு இருட்டுலதான்
எலிப்பொறியில் சிக்கியிருக்க
பக்கம் குனிஞ்சி பாத்தவள
துள்ளி தோளில் கொத்திடிச்சி
பாதி உசிரு போன பாம்பு....
-தொடரும்-