We are just friends

என்னை முதன் முதலில்
நம்பியவள் நீ

என்னை முதன் முதலில்
படித்தவள் நீ

என்னை முதன் முதலில்
செதுக்கியவள் நீ

என்னை முதன் முதலில்
கனவு காண வைத்தவள் நீ

என்னை முதன் முதலில்
அழகுப் படுத்தியவள் நீ

என்னை முதன் முதலில்
சிரிக்க வைத்தவள் நீ

என்னை முதன் முதலில்
கோபப்பட வைத்தவள் நீ

என்னை முதன் முதலில்
காதலித்தவள் நீ

என்னை முதன் முதலில்
முத்தமிட்டவள் நீ

என்னை முதன் முதலில்
காயப்பட வைத்தவள் நீ
We are just friends என்ற பொழுது .......!

எழுதியவர் : ராஜா (7-May-15, 2:08 pm)
சேர்த்தது : ராஜா
பார்வை : 274

மேலே