கல்லூரிக் கனவு

வருடங்கள் நான்கு
வந்தது இந்த கனவு !
நண்பர்கள் பூத்துக்குலுங்கிய
நட்பெனும் அழகிய மலர்த்தோட்டமாய் !

வேற்றுத்திசை பறவைகள் நாங்கள்
அன்பெனும் இறைதேடி வந்தோம் !
கண்டறிந்து பருகிய வேளையிலே
கைத்தவறி காற்றோடு போனதே !

எங்கள் இதயங்கள் வேறாகலாம்
இருப்பினும் ஒன்றாய்ப் பிணைக்கப்பட்டோம் !
தோள்கொடுத்து நம்மைக் காக்கும்
தோழமை என்னும் உணர்வுகளால் !

கல்லூரிவானின் விண்மீன்கள் நாங்கள்
அன்பெனும் இரவால் பொலிவுற்றோம் !
பொலிவு நிலைக்குமென்று எண்ணுகையில் !
பிரிவெனும் சூரியன் வந்துதொலைந்ததே !

கனவுகலையும் வேளை நெருங்கியது
கல்லூரி வாழ்க்கையும் முடிந்தது !
விடைபெறுகிறேன் நான்
விழியில் பெருகும் கண்ணீர்த்துளிகளுடன்!!!!!!!!!!

எழுதியவர் : நா.அன்பரசன்.... (13-May-15, 2:22 pm)
சேர்த்தது : anbuarun
பார்வை : 190

மேலே