தொலைத்து விட்டேன்

நட்ட நடு இரவில்
மின் விசிறி இறைச்சல்
மீறிய முழு அமைதியில்
கனவு முடிந்துப் பிரிந்த கணத்தில்
கவிதை ஒன்று தோன்றியது
அப்பொழுதே பா கட்டி மனதில்
செப்பனிட்டு உள்ளம் மகிழ்நதேன்
காலை எழுந்து எழுதவேண்டும்

பின் இரவில் தோன்றிய பா
கண்ணாம் பூச்சி காட்டி மறைய
அடுத்த நாள் கனவிலும்
ஆலாய்ப் பறந்து தேடினேன்
கண்டவர் உடன் தெரிவிக்கவும்.

-------முரளி

எழுதியவர் : முரளி (20-May-15, 6:29 am)
Tanglish : tholaithu vitten
பார்வை : 166

மேலே