எழுதிப் பழகுகிறேன்
அரசியல் காட்டில்
பசியாறிய மான்கள்
பசியாற்றியது நரிகளுக்கு
-----------------------------------------
சமத்துவபுரம்
குப்பைத்தொட்டி
-----------------------------------------
ஜனநாயக நாற்காலியில்
முதலமைச்சரா
முதலாளி அமைச்சரா
-----------------------------------------
ஜனநாயகம் காணவில்லை
வழக்கு தள்ளுபடி
காரணம்
10 சதவிகிதத்திற்குள் தான்
காணவில்லை
- நி(நீ)தித்துறை
------------------------------------------
செடி எழுதிய
பூக்கவிதை பிடிக்கவில்லை
கசக்கி போட்டது புயல்
-------------------------------------------
நெருங்க முடியா
கதிரவனை
கச்சிதமாய் இரவிட்டு மூடிய
மச்சக்காரன் யார் ?
-------------------------------------------
ஓர் இரவுக்குள்
காவலில் இருந்த சூரியனுக்கு
ஜாமீன் கிடைத்ததை
ஏன் காமிக்க மறக்கிறீர்கள்
- கொ. ப . செ
-------------------------------------------
அதிகம் கை நீட்டுகிறாய்
வெட்டவேண்டும்
தாசில்தார் வீட்டு மரம்
------------------------------------------
வடை சுட்ட பாட்டிக்கு
கதை தெரியுமா
திருடியது வடை மட்டுமா
கதையும் தான்
------------------------------------------
வானில்
சிகரெட் பிடிக்கும்
சீக்ரெட் மனிதன் யார்
கருத்த மேகம்
---------------------------------------------
வெடித்து சிதறும் அளவு
பஞ்சை
வானில் விதைத்தது யார்
நெசவாளர்கள் தேவை
----------------------------------------------