ஒரு பா ஒருபஃது ----- வாழ்த்தும் நன்றியும்

கவிகள் அனைத்தும் கடலிலே ஒன்றி
செவியில் நிறைந்துமே சங்கமித்துப் போட்டி
நடத்தி முதலிடம் நின்ற எனையும்
உடனடி வாழ்த்தும் உலகு . 1

உலகினில் என்பா உவந்து முகநூல்
பலதளம் எட்டும் பரவசத்தைத் தந்த
நிறுவனர் அண்ணனாம் நீலமேகம் நீங்கள்
பெறுவதும் நற்புகழ்ப் பேறு . 2

பேற்றினை ஆசானும் பெற்றிட வேண்டியே
போற்றியே ஞானம் புகழ்ந்துநான் பாடினேன்
மூத்தவராம் நிர்வாகி முற்றும் அறிந்தவராம் ;
காத்திடுவீர் கல்வியெனும் கண் . 3

கண்ணாய்க் கருதிடும் கல்வியும் மாறாது
எண்ணம் அதிலோங்கி என்றும் நிலைத்துவிடும் .
இன்பத் தமிழை இயம்பும் கவியன்பர்
துன்பம் களைவதவர் தொண்டு. 4

தொண்டினைச் செய்திடத் தொய்விலா ஊக்கத்தின்
வண்ணமே என்னையும் வாழ்த்தும் விவேக்கும்
நிருவாகி யான நிறைகுட வித்தை
உருவாகும் கூடல் உழைப்பு . 5

உழைப்பை உயர்வாய் உறுதியாய்க் கொண்டே
அழைத்தாள் கவியெழுதும் அன்பால் தமிழ்த்தாய்
இனிக்கும் உறவுகள் ஈண்டுப் பிறக்கக்
கனியாய்ச் சுவைப்போம் கவி . 6

கவிதா யினிதாய்க் கவிதா யினியாய்ச்
செவியில் ஒலித்தது செந்தமிழ்ப் பாவனைய
வந்திங்கு என்னையும் வாழ்த்துமிந்தப் பட்டத்தைத்
தந்திட்டார் சங்கமத்தார் தான் . 7


தானாக வந்த தமிழ்த்தாய் அருளாக
நானாகப் பாப்புனைய நற்றமிழ் யாப்பறிவு
கற்பது என்றன் கடனாம் கவியன்பர்
சொற்படி நிற்றல் சுகம் 8

சுகந்தமாய்த் தோன்றிடும் சுந்தரச் சொற்கள்
அகத்தினில் என்றும் அரும்பிட வைத்தென்னைக்
குன்றினில் ஏற்றிக் குவலயம் கண்டதால்
தென்றலாய் வீசிடவந் தேன் 9

தேன்சுவை பாடலுக்குத் தித்திக்கும் செந்தமிழில்
வான்புகழ் வாழ்த்தினை வாய்மணக்கச் சொன்னதற்கு
நன்றிநான் சொல்லிடுவேன் நாவினிக்க யாவர்க்கும்
கன்றெனும் சின்னக் கவி . 10

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (20-May-15, 5:15 pm)
சேர்த்தது : sarabass
பார்வை : 62

மேலே