பகலவி

பகலவன் பார்த்ததும்
கரைந்திடும் பனியைப் போலே,
கரைகிறேன் என் இளம்
பகலவி உனைப் பார்க்கும் போது!

மலர் தரும் வாசத்தில்
உன்னை மட்டும்தான் சுவாசிகின்றேன்,
உனில் எழும் வாசத்தை
உணர்ந்திட உயிர்க் கொண்டு வந்தேன்!

கனவிலும் செல்லும் வழியெல்லாம்
உந்தன் முகந்தனை வரைகிறேன்!

உறங்கிட மறுக்கும் விழிகளால்
தன்மை இழக்கிறேன்!
நான்,
அனுதினம் தவிக்கிறேன்!!!

எழுதியவர் : பெருமாள் (22-May-15, 5:08 am)
சேர்த்தது : பெருமாள் ராஜா
பார்வை : 88

மேலே