வருடங்களாய் வளர்த்த காதல்

....................................................................................................................................................................................................
ஒரு அலைபேசி, சில ரூபாய் நோட்டு
ஒரு வண்டி, பல சினிமாப் பாட்டு
கைக்குட்டை, செண்ட், சோப்பு, இத்யாதி
காத்திருப்பு, பேச்சு, சந்திப்பு-

நான்காண்டுகளாய் வளர்த்த காதல்..
வீட்டை எதிர்த்து, வீதி நின்று, மாலை மாற்றி......
............ ...................... ....................


வாடகை வீடு, வற்றிய குழாயடி,
பொதுக் கழிப்பிடம்.....

அரிசி பருப்பு புளி மற்றும்
அடுக்களை புத்தகம்....

நகைக்கடன், வேலை, நைட்டி, கைலி...
நண்பன், நண்பி, ஈகோ, நெருடும் வலி...

ஆறே மாதங்களில்..

அவன் பாரில்; அவள் ஊரில்...

நான்கு வருடமாய்த் தொடந்த காதல்
தோற்றது......
திருமணத்துக்குப் பிறகு...! ! ! !

எழுதியவர் : அருணை ஜெயசீலி (4-Jun-15, 4:01 pm)
பார்வை : 444

மேலே