ஹைக்கூ தோட்டம் தந்த தலைப்பு தத்துவம் கவிஞர் இரா இரவி

ஹைக்கூ தோட்டம் தந்த தலைப்பு !

தத்துவம் ! கவிஞர் இரா .இரவி !

அறிந்திடுக
மேடு பள்ளம் சாலை
இன்பம் துன்பம் வாழ்க்கை !

எல்லாம் அறிந்தவர்
எதுவும் அறியாதவர்
இல்லை எவரும் !

பயமுறுத்திடக் கற்பித்து
பயத்தால் தொடர்வது
கடவுள் நம்பிக்கை !

.வருந்தாதே இழந்ததாய்
இழந்தது எதுவும்
உன்னுடையதில்லை !

நிரந்தரமன்று
தீயோருக்கு
வெற்றி !

இன்று நீ
நாளை யாரோ ?
உச்சத்தில் !

கண்டுபிடித்தவர்கள்
வாழ்விலும்
சுழியம் !

அழிக்காமலே சிறிதாக்கலாம்
அருகில் பெரிய
கோடு இட்டு !

தீயில்
கொடிய தீ
பொறாமைத் தீ !

சொல்வதில் உண்மையில்லை
சோர்வதில் அர்த்தமில்லை
சோதிடம் !

எழுதியவர் : கவிஞர் இரா .இரவி (12-Jun-15, 6:46 pm)
சேர்த்தது : கவிஞர் இரா இரவி
பார்வை : 142

மேலே