கன்னிகளின் காத்திருப்பு
இன்னும் கிடைக்காத
வரத்தினை நோக்கியும்
தனக்கான வரமாவது
கிடைக்குமா என்ற அச்சத்திலும்
ஒவ்வொரு நாட்களும்
ஏக்கத்தில் விடிந்து
காத்திருப்பில் கரைந்து
தாங்கமுடியா துக்கத்தில்
முடிவடைகிறது
ஊரெனும் காற்றில்
தூசியாக கூடாது என்றும்
ஈன்றவரின் கண்ணீருக்கு
கருவாக கூடாது என்றும்
பாதி நாட்கள் வேண்டுதலிலே
கானலாகிவிடுகிறது
முதிர் கன்னி காத்திருப்பதும்
இளங்கன்னி ஏங்கி நிற்பதும்
மஞ்சளும் குங்குமமும்
வாழையும் மேளமும்
நிறைந்த மணப்பந்தல் காணவோ !!!
தட்சனை பெறாமலே வரம் கொடுக்கும்
வரனை வழி பார்த்தோ !!!