தாவணி பெண்கள்
தாவணி பெண்கள் எங்கே
மனம் தடுமாறும் அங்கே
தாமிரபரணி கலங்கி நிக்குது
தண்ணீர் குடங்கள் எங்கே
குளத்து நீரில் மஞ்சள் வாசம்
குளிச்சு முடிச்சா மணக்கும் தேகம்
தெருவேல்லாம் வண்ணகோலம்
திருவிழானு நெனைக்க தோனும்
திமிர் கலந்து தமிழ்பேசும் குமரி பெண்கள் எங்கே
அந்த குலவை சத்தங்கள் எங்கே
பாரதி கேட்ட புதுமை பெண்
பாவாடை கட்டுமா இங்கே
அது தமிழ் பேசுவது எங்கே
இங்லீஷ் பாதி தங்லீஷ் மீதி பட்டையகிளப்புது
பாவம் பாரதி இல்லை இங்கே
மனம் பரிதவிக்குது அந்த பழைய வாசம் எங்கே
ஆடைகள் பெண்ணுக்கு சீதனம்
ஆணுக்கு அது சாதகம்
நாகரிகம் என்று பல்ல இளிக்குது
நாசமா போனபின் கண்ணகசக்குது
அட பண்பாடும் எங்கே
அது தள்ளாடுது சாலையில் அங்கே
பகுத்தறிவு அது எங்கே
சாராயபாட்டிலில் ஊறுது அங்கே
மனம் புண்ணாய் போனது ஏனோ
பணம் பொன்னாய் போனதாலோ
அட எப்போ வரும் ஞானம்
இது புத்தன் இல்லா காலம்
அந்த பொன் நாள் இனி ஏது
வயசு பின்னால் போகுது பாரு
நான் கண்ணால் கண்டது நூறு
அது கனவு இல்லை பாரு
அந்த குருவி கூட்டங்கள் எங்கே
குயில்கள் சத்தமும் எங்கே
தாமரை குளங்கள் எங்கே
அந்த தாவணி கனவுகள் எங்கே
மனம் தந்தி அடிக்குது இங்கே,,,