ஆசிரியர் தினம்

அன்பதனை அளக்காது அள்ளி வீசுபவர்களே.
அறிவின் ஆளுமையை அதிநவீனப்படுத்துபவர்களே.
ஏணியாக பிறருக்கு ஏற்றத்தைக்
கொடுக்கும் என்னவர்களே!

ஊக்கப்படுத்தியே உயரத்தின் உச்சிக்கு அழைத்துச் செல்லும்
என் உடன் பிறந்தவர்களே!
புன்னகையாளர்களே.
பிரிவைப் பகிரும் பண்புடையாளர்களே.
பழகியதை பேனாவில் பகிரக்கோரி
எனைப் பலவீனப்படுத்தியவர்களே!
ஆசிரியர்தின நல்வாழ்த்துக்களோடு
வணக்கங்கள்...
ஆசைஆசையாய் ஆசிரியரானோம்
அறப்பணியில் நம்மை அர்ப்பணித்தோம்
கற்பித்தல் என்பதன் பொருள் புரியவா? இல்லை
கற்றல் என்னும் கடலில் மூழ்கி முத்தெடுக்கவா?
புரியவில்லையே!
ஆசானாய் விளங்குவதில் நம்மையே தொலைத்தோம்
ஆனாலும் நாம் நம்மை தேடவில்லை..:
மாறாக கனவு காண்கிறோம்.
மாணவர்கள்
நம் கருத்தை காந்தமாக கவர
கச்சிதமாக உயர
நல்லாசான் பட்டத்தை அவர்கள் நமக்குத் தர
நாம் மறுக்கிறோமோ?
அதற்குள் அவசரப்படுகிறோமோ!
ஏ!.. தோழியே
நம் தோயாத கற்பித்தலை
துணிவோடு உணர்த்தி
உற்சாகமாய் இருப்போம்
ஏ!... அன்பனே
அடுக்கிக் கொண்டிருக்கிறோம் ஆசையை
விடுத்துக் கொண்டிருக்கிறோம் ஆரவாரத்தை
எடுத்துக் கொள்வோம் ஆலோசனையை!
அன்பதனை அலட்சியப்படுத்துபவர்களுக்கு
அறிவின் ஆளுமையை ஆறுதலாக்குவோம்!
ஆவேசத்திற்கு மட்டுமல்ல
அறப்பணி
அன்பை. ஆசையை. அறிவை.
அதிநவீனப்படுத்துவதற்கும்
கனவின் உடன்பிறப்பாய் பிறந்தது போதும்
கலியுகத்தின் உயிராய் பிறக்க கட்டளையிடுவோம்:
அன்புக்கு அடிமையாய் வாழ்வதோடு
அநியாயத்தின் எதிரியாய் வாழ
அறிவுறுத்துவோம்.

எழுதியவர் : சஸ்மிதா (28-Jun-15, 10:47 pm)
Tanglish : aasiriyar thinam
பார்வை : 134

மேலே