என் உயிர் முழுவதும் உபயம்
வானம் நோக்கிப் பார்க்கிறேன்
வானம் இப்போது
அருகாமையில் தெரிகிறது...
தீர்மானங்களைத்
தீட்டிவைத்தப்பின்
நீ என்னை எப்போதும்
திரும்பிப்பார்க்கப்போவதில்லை...
தெரு விளக்கினை
அணைத்துவிட்டு
பாதையை மறைத்துவிட்டதாய்
பாசாங்கு செய்கின்றாய்...
உன்னைத் தேடுவதிலேயே
உயிர் முழுவதையும்
உபயம் செய்துவிட்டேன்...
உள்மனதினை
உற்றுப்பார் - அதில்
ஊசிமுனையளவாவது
எங்கேனும் ஒளிந்துகிடப்பேன்...
எல்லா கடிகாரங்களும்
ஒரே வேகத்தில்
சுழலும் எனும் போதிலும்..
உனக்காகக் காத்திருக்கும்
எனது நிமிடங்களெல்லாம்
நகர்கின்றதா என்ற
நம்பிக்கை எனக்கில்லை...